Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

பிரசவித்த பெண் திடீர் சாவு

மதுரை, ஆக. 29: மதுரை மூன்று மாவடி பரசுராம்பட்டி மகாலட்சுமி 3வது தெருவை சேர்ந்த சோனை முத்து மனைவி வைஷ்ணவி (24). இவருக்கு திருமணமாகி ஓராண்டு ஆகிறது. கடந்த ஆக.14ம் தேதி பிரசவத்திற்காக பரசுராம்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் குழந்தைக்கு தோல் பாதிப்பு ஏற்பட்டதால் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்நிலையில் வைஷ்ணவி திடீரென மயக்கமடைந்தார். தொடர்ந்து அவரும் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி வைஷ்ணவி உயிரிழந்தார். இதுகுறித்து கணவர் சோனை முத்து அளித்த புகாரின் பேரில் திருபாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.