Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

மதுரை மாநகராட்சி வார்டுகள் தள்ளாட்டம்; அன்றாடம் அவதிக்குள்ளாகும் மக்கள்

மதுரை, ஜூலை 29: தவெக ஆட்சி அமைந்தது முதல் மதுரை மாநகராட்சிக்கான வார்டு கவுன்சிலர் மேம்பாட்டு நிதி துவங்கி பொது, திட்ட, சிறப்பு நிதியென எந்தவொரு நிதி ஒதுக்கீடுமின்றி 100 வார்டுகளிலும் ஒரு சிறு பணியும் நடக்காமல் மக்கள் அன்றாடம் அவதிக்குள்ளாகி தவியாய் தவித்து வருகின்றனர்.மதுரை மாநகராட்சியின் 5 மண்டலங்கள் 100 வார்டுகளை கொண்டிருக்கிறது. ஏற்கனவே 72 வார்டுகள் இருந்த நிலையில் விரிவாக்கம் கண்டதை தொடர்ந்து கடந்த திமுக ஆட்சியில் வாரந்தோறும் பல்வேறு நிதி ஒதுக்கீடு நடவடிக்கைகளால் வார்டுகள் தோறும் எண்ணற்ற பணிகள் நடந்தன. மாநகராட்சி நிதியுடன், பொது, திட்ட, சிறப்பு நிதிகளும் ஒதுக்கப்பட்டன. எம்எல்ஏ, எம்பி, நிதிகளும் தாராளமாக மாநகராட்சி மேம்பாட்டு பணிகளுக்கு கிடைத்து வந்தது.