Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

மதுரை, ஜூலை 29: மதுரை நாராயணபுரம் ஹவுஸிங் போர்டு காலனியை சேர்ந்தவர் மாடசாமி (46). இவர் மீது கொலை முயற்சி, சொத்துக்களை சேதப்படுத்துதல் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால் இவர் போலீசாரின் தீவிர கண்காணிப்பில் இருந்து வந்தார். இந்நிலையில் இவர் பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகமான வகையில் செயல்பட்டது தெரியவந்தது. இதனடிப்படையில் மாடசாமியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார். இதன்பேரில் போலீசார் மாடசாமியை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.