வாடிப்பட்டி, ஜூன் 29: சமயநல்லூரில் தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்ட தலைவர் பிச்சை தலைமை வகித்தார். மாவட்ட குழு சித்தாராமன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் நாகேந்திரன் வரவேற்றார். மாநில தலைவர் விஜயமுருகன் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் இளங்கோவன், மாவட்ட தலைவர் வேல்பாண்டி, நிர்வாகி முத்துபேயாண்டி சிறப்புரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் தவெக தேர்தல் அறிக்கையில் கூறியது போல் முதல்வர் விஜய் விவசாய கடன் அனைத்தையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், தேங்காய்க்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும்,
மதுரை மாவட்டத்தில் உள்ள கமிஷன் கடைகளில் விவசாயிகளிடம் 100 தேங்காய்களுக்கு 15 தேங்காய்கள் இனாமாக எடுப்பதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும், உரித்த தேங்காய் ஒரு கிலோ ரூ.60, உரிக்காத பச்சை தேங்காய் ஒரு கிலோ ரூ.30, கொப்பரை தேங்காய் ஒரு கிலோ ரூ.180 என விலை நிர்ணயம் செய்ய வேண்டும், மதுரை மாவட்டத்தில் தென்னை சார் தொழில்களை துவங்க வேண்டும், தேங்காய் எண்ணெய்யை ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலிபுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். மாவட்ட துணை செயலாளர் கார்த்தி நன்றி கூறினார்
