Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

100 நாள் வேலை கேட்டு மாற்றுத்திறனாளிகள் மறியல்: திருமங்கலம் அருகே பரபரப்பு

திருமங்கலம், ஜூலை 28: திருமங்கலம் அருகேயுள்ள சாத்தங்குடியில் நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சாத்தங்குடி மற்றும் சுற்றியுள்ள கண்டுகுளம், புலியூர் கிராமங்களை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பணி வழங்க வேண்டும், பணி இல்லாததால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி திருமங்கலம் பிடிஓவிடம் மனு கொடுத்தனர்.

ஆனால் தற்போது வரை அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அதிருப்தியடைந்த மாற்றுத்திறனாளிகள் நேற்று சாத்தங்குடியில் திருமங்கலம்- உசிலம்பட்டி சாலையில் திடீர் மறியிலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த திருமங்கலம் தாலுகா போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டனர். இந்த மறியலால் அப்பகுதியில் சுமார் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.