Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

குமாரம்- சித்தாலங்குடி சாலையில் மின்விளக்குகள் அமைப்பது அவசியம்

மதுரை, ஆக. 28: குமாரம்-சித்தாலங்குடி சாலையில் மின்விளக்குகள் பொருத்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. மதுரை - அலங்காநல்லூர் சாலையில் உள்ள குமாரம் பிரிவிலிருந்து மதுரை - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நகரி வரையிலான சாலை 14 கி.மீ, தூரம் கொண்டது. இச்சாலையில் அரியூர், வயலூர், சிறுவாலை, பிள்ளையார்நத்தம், வைரவநத்தம், சித்தாலங்குடி உள்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. தினசரி, ஆயிரக்கணக்கான வாகனங்கள் இச்சாலை வழியாக சென்று வருகின்றன. இச்சாலையில் உள்ள கிராமங்களில் வயலூர், அரியூர் உட்பட பலவற்றில் கிணறு மற்றும் கண்மாய் பாசனம் வாயிலாக இரண்டு முதல் மூன்று போக விவசாயம் நடக்கிறது.

இப்பகுதிகளில் விளையும் விளைபொருட்களை இங்குள்ள, விவசாயிகள் மதுரையின் மாநகர் பகுதிகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்வதற்காக குமாரம்-சித்தாலங்குடி சாலையை பயன்படுத்தியே கொண்டு செல்ல வேண்டும். இதனால், வேளாண் மட்டுமின்றி தொழில் தொடர்பான போக்குவரத்திற்கும் இது, முக்கிய சாலையாக உள்ளது. இச்சாலையில் வைரவநத்தம், சிறுவாலை, பிள்ளையார்நத்தம் உள்ளிட்ட பிரிவுகளில் மட்டும் மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ள நிலையில் மற்ற ஊராட்சிகள் சந்திக்கும் இடங்களில் போதிய அளவில் மின்விளக்குகள் பொருத்தப்படாமல் உள்ளது.

இதனுடன், சிறுவாலை பிரிவு, பிள்ளையார் நத்தம் பிரிவு, அரியூர் மற்றும் வயலூர் பிரிவு, வைரவநத்தம் பிரிவு உட்பட பல இடங்களில் சாலை சேதமடைந்துள்ளது. பல மாதங்களாக சேதமடைந்துள்ள சாலையில், மின்விளக்குகளும் இல்லாததால் அவற்றில் இரவு நேரங்களில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் கவனித்து, சம்பந்தப்பட்ட சாலையில் மின்விளக்குகள் பொருத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.