Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

நஹாய் அடையாள சின்ன போட்டி பங்கேற்க அழைப்பு

மதுரை, ஆக. 26: மதுரை மண்டல தேசிய நெடுஞ்சாலை ஆணைய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (நஹாய்) மற்றும் இந்திய அரசும் இணைந்து தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கான (மாஸ்காட்) ‘அடையாள சின்னம்’ வடிவமைக்கும் போட்டியை நடத்த உள்ளன. தடையற்ற இணைப்பு, சாலை பாதுகாப்பு, புதுமை, நம்பிக்கை, நிலையான உள்கட்டமைப்பு மற்றும் தேச கட்டமைப்பு ஆகிய நெடுஞ்சாலை ஆணையத்தின் தொலை நோக்கு பார்வையை வெளிப்படுத்தும் விதத்திலான ஒரு அடையாள சின்னத்தை வடிவமைக்க இது உதவும்.

இப்போட்டியில் தேர்வு செய்யப்படும் அடையாள சின்னம், விழிப்புணர்வு பிரசாரங்கள், பொதுமக்களுடனான தொடர்பு, அரசு நிகழ்ச்சிகள், வெளியீடுகள், டிஜிட்டல் தளங்கள் மற்றும் பிறவற்றில் நெடுஞ்சாலை ஆணையத்தை பிரதிநிதித்துவப்படுத்தும். இதில் வெற்றி பெறுவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.50 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ. 25 ஆயிரமும் வழங்கப்படும். கலந்து கொள்ள விரும்புபவர்கள் mygov.in/task/nhai-mascot-design-competition என்ற இணையதளத்தில் பார்க்கலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.