Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

மீனாட்சி அம்மன் கோயில் நில மோசடி வழக்கில் இருவரின் ஜாமீன் மனு தள்ளுபடி

மதுரை, ஆக. 28: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான, சுமார் ரூ.60 கோடி மதிப்பிலான 1.79 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை முறைகேடாகப் பட்டா மாற்றம் செய்து, போலியான ஆவணங்கள் மூலம் ஆக்கிரமித்ததாகக் கூறி முன்னாள் சப் கலெக்டர் அன்பழகன் உட்பட 19 பேர் மீது மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இவ்வழக்கில் தொடர்புடைய அரசன், இளையராஜா ஆகியோர் ஜாமீன் கோரி மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு நீதிபதி சாய் சரவணன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் வழக்கறிஞர் பாண்டி ஆஜராகி, தற்போது வருவாய் ஆய்வாளரான அரசன் மற்றும் இளையராஜா ஆகியோர் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள். இவர்கள் கோயில் நிலம் எனத் தெரிந்து, ரியல் எஸ்டேட் நிறுவனத்திடம் விற்பனை ஒப்பந்த பத்திரம் செய்து முன்பணம் வாங்கியுள்ளனர். கோயில் இடம் எனத் தெரிந்தே இந்த சதி செயலில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது’’என்றார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.