Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ரயிலில் பாய்ந்து ஒருவர் தற்கொலை

சோழவந்தான், ஆக. 26: சோழவந்தான் ரயில் நிலையம் அருகேயுள்ள தண்டவாளத்தில் நேற்று மாலை தலை துண்டான நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக மதுரை ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து எஸ்ஐ கேசவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் இறந்தவர் கரூர் மாவட்டம் காந்தி கிராமத்தை சேர்ந்த சதாசிவம் (52) என்பதும், சோழவந்தானில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.