மதுரை, ஆக. 28: மதுரை மீனாட்சி அம்மன் ேகாயிலில் செப்.17ல் குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. குடமுழுக்கு விழா நடைபெறும் இடங்களில் அன்னதானம் வழங்குதல், பக்தர்களால் வழங்கப்படும் பிரசாத உணவுகள், குளிர்பானங்கள் ஆகியவை சுத்தமாகவும், சுகாதாரமாகவும், பாதுகாப்பான உணவாக, செயற்கை சாயங்கள் எதுவும் சேர்க்காமல் வழங்க வேண்டும். தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் கப்புகள் ஆகியவற்றை முழுமையாக தவிர்க்க வேண்டும். மாற்றாக அன்னதானம் மற்றும் உணவுப்பொருட்கள் வழங்க வாழை இலை, பாக்கு மட்டை அல்லது தொன்னையில் வழங்கப்பட வேண்டும்.
அன்னதானம் வழங்குவோர், பெறுவோர் சேரும் கழிவுகள் முறையாக சேகரித்து மாநகராட்சி குப்பை தொட்டியில் கொண்டு சேர்க்க வேண்டும். இலவச அன்னதானம், பிரசாதம், குளிர்பானங்கள், நீர்மோர் மற்றும் குடிநீர் வழங்குவோர் https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் இணைய வழியில் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பித்து மதுரை மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் அனுமதி (பதிவுச் சான்றிதழ்) பெற்று மட்டுமே வழங்க வேண்டும். தவறினால், உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டப்படி, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.




