Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் பொறுப்பேற்பு

மதுரை, ஜூன் 26: மதுரை மாநகர் போலீஸ் கமிஷனராக ராஜேந்திரன் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். மதுரை மாநகர் போலீஸ் கமிஷனராக இருந்த கபில்குமார் சரத்கர் பதவி உயர்வு காரணமாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த ராஜேந்திரன், மதுரை போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார். இவர், நேற்று மதுரையில் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் 1998ம் ஆண்டு குரூப்-1 தேர்வின் மூலம் டிஎஸ்பியாக பணியில் சேர்ந்தார். தொடர்ந்து பதவி உயர்வின் மூலம் 2012ல் ஐபிஎஸ் தகுதிக்கு உயர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.