Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பத்ம விருது பெறுவதற்கு ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்: மாவட்ட நிர்வாகம் தகவல்

மதுரை, மே 26: பத்ம விருதிற்கு தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டதாவது: பொதுமக்களிடம் உள்ள பன்முக திறமைக்கான பத்ம விருதுகள், ஆண்டு தோறும் குடியரசு தினத்தன்று வழங்கப்பட்டு வருகிறது. 2027ம் ஆண்டிற்கு கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப் பணி, அறிவியல் மற்றும் பொறியியல், பொது நிர்வாகம், சிவில் சேவை, வர்த்தகம் மற்றும் தொழில் துறைகளில் பல்வேறு சாதனை புரிந்தவர்கள் இந்த விருது பெறலாம்.

எனவே இதற்கு தகுதியான நபர்களிடமிருந்து கருத்துரு www.awards.gov.in என்ற இணையதளம் மூலம் வரவேற்கப்படுகின்றன. மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 31.07.2026க்குள் மேற்கண்ட இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் அதுகுறித்த விபரத்தினை, மாவட்ட சமூக நல அலுவலர் அலுவலக முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு, மாவட்ட சமூக நல அலுவலகத்தினை நேரில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்தனர்.