Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பேரையூரில் துணிகரம்: வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை திருட்டு; மர்ம நபர்கள் கைவரிசை

பேரையூர், மே 26: பேரையூர் கேகேஜி நகரைச் சேர்ந்தவர் முத்துமாரியப்பன். இவரது மனைவி ராதா (54). இவர் நேற்று முன்தினம் தனது வீட்டைப் பூட்டிவிட்டு, ராஜபாளையத்திலுள்ள அவரது மகன் வீட்டிற்கு சென்றார். பின்னர் நேற்று காலையில் அங்கிருந்து பேரையூருக்கு திரும்பி வந்தார். அப்போது அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவுகள் திறந்து கிடந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, அங்குள்ள பீரோவின் பூட்டும் உடைக்கப்பட்டு இருந்தது.

மேலும் பீரோவிற்குள் அவர் வைத்திருந்த 5 பவுன் தங்க நகைகள் திருடு போனது தெரியவந்தது. இது குறித்து ராதா பேரையூர் போலீசாரிடம் புகார் அளித்தார். ேபாலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு நடத்தியதில், அந்த பீரோவில் குறிப்பிட்ட இடத்தில் நகைகள் வைத்திருப்பது குறித்து அறிந்தவர்கள், இந்த துணிகர செயலில் ஈடுபட்டு இருக்கலாம் என தெரியவந்துள்ளது. இதையடுத்து திருட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.