Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

அரசு மீனாட்சி மகளிர் கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு

மதுரை, ஜூன் 25: போதைப்பொருள் பயன்பாட்டின் தீமைகள் குறித்து மாணவிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், மதுரை அரசு மீனாட்சி மகளிர் கல்லூரியில் போதை ஒழிப்பு வார நிகழ்ச்சி நடந்தது. மதுரை மீனாட்சி அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில், போதைப்பொருள் இல்லா இந்தியா இயக்கம் திட்டத்தின் கீழ், போதை ஒழிப்பு வார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் போதை தடுப்பு குழு சார்பில், ஜூன் 26 வரை விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதில் போதைப்பொருள் இல்லா இந்தியா என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.