Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

டிராவல்ஸ் உரிமையாளர் தற்கொலை

சோழவந்தான், மே 25: சோழவந்தான் அருகேயுள்ள சங்கங்கோட்டையை சேர்ந்தவர் கொட்டாச்சி மருது எனும் பெரியமருது (25). இவருக்கு காளீஸ்வரி என்ற மனைவி உள்ளார். சொந்தமாக ஒரு கார் வைத்து டிராவல்ஸ் தொழில் செய்து வந்தார்.  இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் உள்ள அறையில் தூங்க சென்றவர், மறுநாள் வரை வெளியில் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது பெரியமருது தூக்கிட்டு இறந்த நிலையில் தொங்கி உள்ளார். தகவலறிந்து வந்த சோழவந்தான் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காகவாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலைக்கான காரணம் குடும்ப பிரச்னையா அல்லது வேறு காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.