Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

தீக்காயமடைந்த மூதாட்டி சாவு

மதுரை, ஜூலை 24: மதுரை தெற்குமாசி வீதியை சேர்ந்த மூதாட்டி குருவம்மாள்(79). இவர் கடந்த 3ம் தேதி இரவு, வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த போது காஸ் சிலிண்டரை அணைக்காமல் வெளியே சென்று விட்டார். இதற்கிடையில் எரிவாயு கசிந்து கொண்ேட இருந்துள்ளது. பின்னர் மீண்டும் வீட்டிற்குள் வந்து அடுப்பை பற்றவைக்க முயன்றார். அப்போது, வீட்டிற்குள் பரவியிருந்த எரிவாயு தீப்பற்றி விபத்து ஏற்பட்டது. இதில் குருவம்மாள் படுகாயமடைந்தார். தொடர்ந்து, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.