Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

நாகர்கோவில்- மதுரை இடையே அதிகாலையில் ரயில் இயக்கப்படுமா?

மதுரை, ஜூலை 24: திருச்சி - திருவனந்தபுரம் இன்டர்சிட்டி ரயில் திருவனந்தபுரத்துக்கு நீட்டிப்பு செய்வதற்கு முன்பு நாகர்கோவிலிருந்து காலை 7.30 மணிக்கும், அடுத்து மாலை 5.30 மணிக்கு தான் திருநெல்வேலி, மதுரை வழியாக தினசரி ரயிலாக இயக்கப்பட்டது. இதேபோல் மறு மார்க்கமாக மதுரை, திருச்சியிலிருந்து அதிகாலையிலிருந்து மதியம் வரை எந்த ஒரு தினசரி ரயில் வசதியும் இல்லாமல் இருந்து வந்தது.

கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து திருநெல்வேலி, மதுரை மார்க்கமாக தற்போது இரவு 10.40 மணிக்கு பிறகு காலை 6 மணிக்கு தான் ரயில் வசதி உள்ளது. சுமார் 8 மணிநேரம் எந்த ஒரு ரயில் வசதியும் இல்லை. ஆனால், திருவனந்தபுரம் மார்க்கம் பயணம் செய்ய இரவு 9.20, அதிகாலை 2, 4.05, 4.30 என வரிசையாக தினசரி ரயில்கள் உள்ளன. திருநெல்வேலி- மதுரை இடையே எந்த ரயிலும் இல்லாததால், மதுரையில் உள்ள ஐகோர்ட்டிற்கு தென் மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் பேருந்துகளில் வந்து செல்லும் நிலை உள்ளது.