Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பிளஸ் 2 துணைத் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; மாணவர்கள் பதிவிறக்கம் செய்யலாம்

மதுரை, ஜூன் 24: அரசுத் தேர்வுகள் இயக்ககம் 2026ம் ஆண்டிற்கான பிளஸ் 2 துணைத்தேர்வு மற்றும் பிளஸ் 1 அரியர் தேர்வுகளுக்கான அட்டவணையை கடந்த மே மாதம் வௌியிட்டது. அதன்படி பிளஸ் 2 துணைத் தேர்வுகள் ஜூன் 29ம் தேதி தொடங்கி ஜூலை 7 வரையிலும் நடக்கிறது. பிளஸ் 1 அரியர் தேர்வு ஜூலை 8ம் தேதி தொடங்கி 16 வரை நடக்கிறது. இந்த துணைத் தேர்வுகளுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட்டுகள் இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இவற்றை தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்யலாம்.

இதன்படி இணையத்தில் ஹால்டிக்கெட் என்ற பகுதியைத் தேர்வு செய்து, ஜூன் / ஜூலை 2026 ஹால்டிக்கெட் பதிவிறக்கம் என்ற இணைப்பை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் விண்ணப்ப எண் அல்லது நிரந்தரப் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்யலாம். செய்முறைத் தேர்வுகளுக்கான தேதி மற்றும் விவரங்களை, தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

உரிய ஹால் டிக்கெட் இன்றி எந்தத் தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும், ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்த பின்னர், தாங்கள் எழுதவுள்ள பாடங்கள் மற்றும் தேர்வு தேதிகளை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். ஹால் டிக்கெட் பதிவிறக்கம் தொடர்பான சந்தேகங்களுக்கு 94983 83075 மற்றும் 94983 83076 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.