Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

திருமங்கலம் அருகே 4 கிலோ கஞ்சா பறிமுதல்

திருமங்கலம், மே 23: திருமங்கலம் அருகே டூவீலரில் 4 கிலோ கஞ்சாவை பதுக்கி கொண்டு வந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர். செக்கானூரணி எஸ்ஐ ஜெயலட்சுமி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். திருமங்கலத்தினை அடுத்த சொரிக்காம்பட்டி கிராமத்தில் போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்த போது அந்த வழியாக டூவீலரில் வந்தவரை நிறுத்தி சோதனையிட்டனர். அவரது வாகனத்தில் நான்கு கிலோ கஞ்சா இருந்தது தெரியவரவே போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

கஞ்சாவுடன் டூவீலரில் வந்த அந்த நபரிடம் விசாரணை நடத்திய போது சொரிக்காம்பட்டியை சேர்ந்த சிவக்குமார்(எ)ஒப்படியன்(40) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்து டூவீலரையும் பறிமுதல் செய்தனர்.