Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

மூன்றாண்டுகளுக்குப் பிறகு 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சதம் அடித்த அரசுப்பள்ளி: கள்ளிக்குடி ஒன்றிய பள்ளிகளும் சாதனை

திருமங்கலம், மே 22: கடந்த மூன்றாண்டுகளுக்கு பிறகு, திருமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு பொதுதேர்வில் 100 சதவிதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. திருமங்கலம் நகரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இருபாலர் பள்ளியாக மாற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து கடந்த 2023ல் முதல்முறையாக 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தது. பின் கடந்த இரண்டு முறையும் இந்த பள்ளியின் தேர்ச்சி விகிதம் குறைவாகவே இருந்தது. இந்தநிலையில் தற்போது 10ம் வகுப்பு பொதுதேர்வில் மீண்டும் சதம் அடித்து சாதனை படைத்துள்ளது. இந்த பள்ளியில் இந்தாண்டு 40 மாணவர்கள் மற்றும் 4 மாணவிகள் என 44 பேர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினர்.