Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

மதுரை கிழக்கு தொகுதிக்கான தேர்தல் முடிவு குறித்து திமுக நிர்வாகிகளுடன் கள ஆய்வு: விரிவான கருத்துக்கள் பெறப்பட்டன

மதுரை, மே 22: மதுரை ஆலாத்தூரில் கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் முடிவு தொடர்பான திமுக கள ஆய்வு நேற்றுந நடைபெற்றது. நடைபெற்றதில் மாவட்டச் செயலாளர் முன்னாள் அமைச்சர் பி.மூர்த்தி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பங்கேற்று தங்கள் கருத்துக்களை தனித்தனியே எடுத்துரைத்தனர். திமுக தலைவர் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் 2026 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து, 234 தொகுதிகளிலும் நிர்வாகிகளை சந்தித்து களஆய்வு நடத்தி அறிக்கை தருமாறு உத்தரவிட்டுள்ளார். இதன்படி மதுரை வடக்கு மாவட்ட திமுகவுக்குட்பட்ட மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, மேலூர் மற்றும் சோழவந்தான் சட்டமன்ற தொகுதிகளுக்கான கள ஆய்வு அடுத்தடுத்து நடைபெற உள்ளது. இதில் முதல்கட்டமாக நேற்று மதுரை ஆலாத்தூரில் உள்ள பி.ஆர் திருமண மண்டபத்தில் கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான கள ஆய்வு நடைபெற்றது.