Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

தென்னை டானிக் செயல் விளக்கம்

மதுரை: மதுரை வேளாண்மை அறிவியல் நிலையத்தின் சார்பில், மதுரை கிழக்கு வட்டாரத்தில் உள்ள சக்கிமங்கலம் கிராம விவசாயிகளுக்கு தென்னை டானிக் உபயோகம் குறித்து நேரடி செயல் விளக்கம் செய்து அளிக்கப்பட்டது. இதில் வேளாண் விரிவாக்க பணிகளின் தொழில்நுட்ப வல்லுனர் முனைவர் செல்வராணி கலந்துகொண்டு, தென்னை டானிக்கை மரத்துக்கு வேர் மூலம் செலுத்தும் முறை குறித்தும், குரும்பை கொட்டுவதை தடுப்பது மற்றும் மகசூலை அதிகரிப்பதற்கு தென்னை டானிக்கின் பயன்பாடுகள் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தார்.

அடுத்தகட்டமாக தொழில்நுட்ப உதவியாளர் மாரிமுத்து தென்னை டானிக்கை வேர் மூலம் செலுத்தும் வழிமுறை குறித்து செயல் விளக்கம் அளித்தார். இந்நிகழ்வில் மதுரை மாவட்டத்தின் பல்வேறுபகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.