மதுரை, ஆக. 21: சாலை பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு, போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் தடுப்பு ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மதுரையில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா தலைமை வகித்தார். எஸ்பி தேவநாதன், டிஆர்ஓ அன்பழகன், காவல் துணை ஆணையர்(வடக்கு) கார்த்திக், (தெற்கு) இனிகோ திவ்யன், மாநகராட்சி துணை ஆணையாளர் ஜெய்னுலாப்தீன், உசிலம்பட்டி சப் கலெக்டர் உட்கர்ஷ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதற்கிடையே மதுரையைச் சேர்ந்த சரஸ்வதி(80) என்பவரின் கணவர் மற்றும் மகன் இறந்த நிலையில் பள்ளிகளுக்கு அருகில் மிட்டாய் விற்று வாழ்ந்து வருகிறார். இதனால், முதியோர் உதவித் தொகை வழங்கக்கோரி கடந்த 17ம் தேதி நடந்த பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தார். இதன்மீது உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று முதியோர் உதவித் தொகை வழங்குவதற்கான ஆணை அவரிடம் வழங்கப்பட்டது.



