Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

செல்போன் பறித்த மூன்று பேர் கைது

திருமங்கலம், ஜூலை 21: திருமங்கலம் அருகேயுள்ள அழகுசிறையை சேர்ந்தவர் ராமச்சந்திரன். வெல்டிங் கடை வைத்துள்ளார். கடந்த மே மாதம் 9ம் தேதி நள்ளிரவு இவர் கடையை மூடிவிட்டு அழகுசிறை - காண்டை சாலையில் உள்ள டீக்கடைக்கு நடந்து சென்றார். அப்போது டூவீலரில் வந்த மூன்று பேர் இவரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்து சென்றனர். இதுகுறித்து ராமச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரிடில் சிந்துபட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு காண்டை விலக்கு பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த மூன்று நபர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் வடக்கம்பட்டியை சேர்ந்த யோகேஷ்(22), சக்திவேல்(20), கரிசல்பட்டியை சேர்ந்த பொன்னங்கன்(26) என்பதும், ராமச்சந்திரனிடம் செல்போனை பறித்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.