Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

மதுரை வேளாண் கல்லூரியில் தேனீ வளர்ப்போர் கலந்துரையாடல்

மதுரை: மதுரை வேளாண் கல்லூரியில் நேற்று மாநில அளவிலான தேனீ வளர்ப்பாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரை வேளாண்மை அறிவியல் நிலையம் மற்றும் கதர் மற்றும் கிராம தொழில்கள் ஆணையம் இணைந்து, மாநில அளவிலான தேனீ வளர்ப்பாளர்கள் சந்திப்பு நிகழ்வினை நேற்று வேளாண் கல்லூரியில் நடத்தியது. இதில் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் (பொறுப்பு) முனைவர் ராகவன், மதுரை சமுதாய அறிவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதன்மை முனைவர் காஞ்சனா மற்றும் உதவி தோட்டக்கலை இயக்குனர் தாமரைச்செல்வி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர்.

வேளாண் அறிவியல் நிலையத் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் சுரேஷ் வரவேற்றார்.மதுரை கதர் மற்றும் கிராமத்தொழில் ஆணைய தேன் துறை அலுவலர் கலிபூர் ரகுமான் திட்டத்தை குறித்து விளக்கினார். கதர் மற்றும் கிராம தொழில் ஆணைய உதவி இயக்குனர் அன்புச்செழியன் துவக்க உரையாற்றினார். கதர் மற்றும் கிராமத் தொழில் ஆணைய உதவி இயக்குனர் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் அதன் பயனாளிகளுக்கான தகுதி விவரங்கள் குறித்தும் விளக்கம் அளித்தார். இதனைத் தொடர்ந்து முன்னோடி தேனீ வளர்ப்பாளர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. முடிவில் உழவியல் தொழில்நுட்ப வல்லுநர் முனைவர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், திருப்பூர், சென்னை, கன்னியாகுமரி, திருப்பத்தூர் மாவட்டங்களைச் சேர்ந்த 120 தேனீ வளர்ப்பார்கள் கலந்து கொண்டனர். வேளாண்மை அறிவியல் நிலையம் மற்றும் கதர் மற்றும் கிராம தொழில்கள் ஆணையத்தின் மூலம் தேனீ வளர்ப்பு பயிற்சி பெற்று தற்போது தேன் உற்பத்தியாளர்கள் மற்றும் தொழில் முனைவோர்களாக உள்ளவர்கள், தங்களது பொருள்களை கண்காட்சியாக வைத்திருந்தனர். இந்த நிகழ்வின்போது வேளாண் அறிவியல் நிலையத்தின் சாதனைகள், தேனீ வளர்ப்பு குறித்த குறுந்தகடுகள் மற்றும் சிறிய தேன் கூடு வண்டு பற்றிய கையேடு போன்றவை வெளியிடப்பட்டன.