உசிலம்பட்டி, ஆக. 19: தமிழக அரசு பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று கோரி, உசிலம்பட்டி அருகே கறவை மாடுகளுடன் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். உசிலம்பட்டி அருகே கருமாத்தூரில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. இதன் மாநிலத் தலைவர் வெண்மணி சந்திரன் தலைமையில், மாவட்டத் தலைவர் மகேந்திரன் முன்னிலையில், பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்தக் கோரியும், தீவனம் மற்றும் கறவை மாடு வளர்ப்போருக்கு 50% மானியம் வழங்க வலியுறுத்தியும் நேற்று கறவை மாடுகளுடன், பால் உற்பத்தியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநில தலைவர் வெண்மணிச் சந்திரன் கூறியதாவது:
பால் கொள்முதல் விலை உயர்வுக்கான கோரிக்கையை வலியுறுத்தி, கடந்த 5ம் தேதியிலிருந்து கூட்டுறவு வங்கிகள், பொதுமக்கள் கூடும் இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறோம். தமிழக அரசு கொள்முதல் செய்யும் பால் விலையில், லிட்டருக்கு ரூ.10 உயர்த்தி வழங்க வேண்டும். ஊக்கத்தொகையாக லிட்டருக்கு வழங்கப்படும் 3 ரூபாயை 7 ரூபாய் என உயர்த்தி வழங்க வேண்டும்.
கேரளாவில் பால் கொள்முதல் விலையாக ரூ.45 வழங்கப்படுகிறது. அதே போல கர்நாடகவிலும் ரூ.45 வரை வழங்குகின்றனர். இதனால் தமிழக பால் அருகில் உள்ள மாநிலங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் எதிரொலியாக தமிழகத்தில் ஆவின் பால் கொள்முதலில் பற்றாக்குறை ஏற்படுவதால், மக்களுக்கும் போதிய அளவில் கிடைக்காமல் போகிறது. தமிழ்நாட்டில் தவெக அரசு பால் கொள்முதல் விலையை உயர்த்தும் என எதிர்பார்த்தோம். இவர்கள் இன்று, நாளை என காலம் கடத்துகிறார்கள்.
கேரளா மற்றும் கர்நாடகாவிற்கு மணல் கடத்தல் போல பாலும் விற்பனையாகிறது. பின்னர் கர்நாடகாவில் இருந்து வரும் பாலினை தமிழக மக்கள் அதிக விலை கொடுத்து வாங்கும் நிலை இருந்து வருகிறது. ஆவினில் பால் கொள்முதல் விலையை உயர்த்தினால் மட்டுமே, விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும். இதன்படி ஆக.30ம் தேதிக்குள் பால் ்ெகாள்முதல் விலையை தமிழக அரசு உயர்த்தாவிடில் பால் விநியகோத்தை நிறுத்தும் ேபாராட்டம் நடத்த முடிவு ெசய்துள்ளோம். இவ்வாறு கூறினார்.




