Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குண்டாஸில் 4 பேர் கைது

மதுரை, ஜூன் 19: மதுரையில் பாலியல் குற்றவழக்கு மற்றும் கஞ்சா வழக்கு விற்பனையில் ஈடுபட்ட 4 பேர் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மதுரை மாவட்ட புதிய எஸ்பி தேவநாதன் பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருட்கள் விற்பனை தடுப்பு வழக்குகளில் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பதவியேற்றதும் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதன்படி, மதுரை மாவட்டம் சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கில் சம்மந்தப்பட்ட மதுரை மேற்கு ஆலம்பட்டி பாண்டியன் (56) பாலியல் குற்றவாளி, உசிலம்பட்டி தாலுகா காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்ற வழக்கில் கைதாகி சிறையில் இருந்த நக்கலபட்டி சதீஷ்குமார்(41) மற்றும் மேக்கிழார்பட்டி சுசேந்திரன்(49), பாண்டு (எ) பாண்டி(31) ஆகிய 3 பேர் போதைப் பொருள் குற்றவாளிகள் ஆவர். இவர்கள் 4 பேரையும் மதுரை கலெக்டர் ஆகாஷ் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதன்படி இவர்கள் 4 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.