மதுரை, ஆக. 18: மதுரை விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கு ரூ.47 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக நீர்வளத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவையை அடுத்து அதிக பயனாளிகளை கையாளும் விமான நிலையமாக மதுரை விமான நிலையம் உள்ளது. 14 மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் இந்த விமான நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இங்கிருந்து சென்னை, பெங்களூர், ஐதராபாத் டெல்லி, மும்பை போன்ற ெபரு நகரங்களுக்கும், சிங்கப்பூர், துபாய், இலங்கை போன்ற வெளிநாடுகளுக்கும் விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு 12 லட்சம் பயணிகள் இங்கிருந்து பயணம் செய்து வரும் நிலையில், 502 ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டு வந்த பழைய விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கு தமிழக அரசு ரூ.200 கோடியில் 633 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த முடிவு செய்தது. இத்திட்டப்படி 3 விமானங்கள் மட்டுமே நிறுத்தும் விதமாக இருந்த விமான நிலையம் தற்போது 8 விமானங்கள் வந்து இறங்கி செல்லும் விதமாக விரிவுப்படுத்தப்பட்டது.
+
Advertisement



