Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

நிதி நிறுவன மோசடியில் பாதிக்கப்பட்டோர் புகார் அளிக்கலாம்: பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவிப்பு

மதுரை, ஆக. 18: மதுரை நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து பணத்தை புகார் அளிக்கலாம் என பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கூறியுள்ளனர். மதுரை எஸ்ஆர்பி குரூப் ஆப் கம்பெனிஸ் நிர்வாக இயக்குநர் அருண்லால், அவரது மனைவி அனிதா ஆகியோர் எஸ்ஆர்பி பின்சர்வ் என்ற தனியார் நிறுவனத்தை மதுரை மானகிரி, கே.கே.நகர், ஆவின் எதிரில் நடத்தி வந்தனர். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்றும், சுமார் ரூ.2 லட்சம் முதலீடு செய்தால் வருடத்திற்கு ரூ.64 ஆயிரம் வட்டி தருவதாகவும் கூறியுள்ளனர். இதை நம்பி மதுரை வரிச்சியூரை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் ரூ.2 லட்சம் பணம் செலுத்தியுள்ளார். 6 மாதங்கள் வரை அசல் மற்றும் வட்டி பணத்தை கொடுத்தவர்கள், பின்னர் பணத்தை கொடுக்கவில்லை என்றும், பணத்தை திரும்ப தராமல் மோசடியும் செய்துள்ளனர்.