Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மணப்பாடு கடலில் ராட்சத அலையில் சிக்கிய மதுரை சிறுவன் மீட்பு: மீனவர்கள் காப்பாற்றினர்

உடன்குடி, மே 18: மணப்பாடு கடலில் ராட்சத அலையில் சிக்கி மாயமான சிறுவன், மயக்கமடைந்து மிதந்த நிலையில் மீனவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகேயுள்ள சுற்றுலாத் தலமான மணப்பாடு கடல் என்பது, ஒருபுறம் ஆர்ப்பரிப்பாகவும், மறுபுறம் அமைதியாகவும் இருக்கும். சிறந்த சூட்டிங் ஸ்பாட் என பல்வேறு சிறப்புகள் நிறைந்த மணப்பாட்டிற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது கோடை விடுமுறையை முன்னிட்டு, ஏராளமானவர்கள் கார், வேன், பஸ்களில் வந்து செல்கின்றனர்.