Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

மதுரையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் வழிப்பறி: டூவீலரில் வந்தோர் கைவரிசை

மதுரை, மே 18: மதுரையில் பேரன், பேத்தியுடன் நடந்து சென்ற மூதாட்டியிடம், டூவீலரில் வந்தோர் வழிப்பறி செய்தனர். பின்னர் அவர்கள் தப்பிச்செல்லும்போது, எதிரே வந்த பைக் மீது மோதும் சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது. மதுரை கூடல் புதூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயலெட்சுமி(52). இவர் அதே பகுதியில் டெய்லர் கடை நடத்தி வருகிறார்.

கடந்த 13ம் தேதி இவர் தனது பேரன், பேத்தியுடன் டெய்லர் கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் டூவீலரில் வந்த மர்ம நபர்கள், திடீரென ஜெயலெட்சுமி கையில் வைத்திருந்த பணப்பையை பறித்தனர். இதனால் அதிர்ச்சியந்த அவர் பணப்பையை இறுக்கிப்பிடித்துக்கொண்டார். மர்ம நபர்கள் பறி

க்கும் முயற்சியை தொடர்ந்தால், அவரும், பேரன், பேத்தி என 3 பேரும் கீழே விழுந்து கூச்சலிட்டனர்.

இதற்கிடையே பணப்பை திருடர்கள் கையில் கிடைத்தவுடன், அங்கிருந்து டூவீலரில் தப்பினர். அப்போது எதிரே வந்திருந்த பைக் மீது அவர்களின் வாகனம் எதிர்பாராமல் மோதியது. இதில் மர்ம நபர்கள் இருவரும் இருசக்கர வாகனத்துடன் கீழே விழுந்தனர். அங்கு பொதுமக்கள் கூடுவதை பார்த்த அவர்கள் ெஜயலட்சுமியிடம் பறித்த பணப்பையை தூக்கி எறிந்து விட்டு, டூவீலரில் விரைவாக தப்பினர்.