சோழவந்தான் பகுதியில் அதிகாரிகளின் அலட்சியத்தால் அடிக்கடி ஏற்படும் மின்தடை:திருட்டு அச்சத்தில் பொதுமக்கள்:நிரந்தர தீர்வு காண கோரிக்கை
சோழவந்தான், ஆக. 17: சோழவந்தான் பகுதியில் அதிகாரிகளின் அலட்சியத்தால் அடிக்கடி ஏற்படும் மின் தடையால் குற்றச்செயல்கள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். சோழவந்தான் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இதில் 3வது வார்டு ரயில்வே கேட்டின் வடபகுதியில் உள்ளது. இந்த வார்டின் வாடிப்பட்டி சாலையில் பசும்பொன் நகர், வஉசி நகர், பாலமுருகன் நகர், எம்விஎம் பள்ளி தெரு, நாகு நகர், மோகன் பிளாட் உள்ளிட்டவைகளில் 1000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 18 வார்டுகளுக்கும் மின் இணைப்புகள் சோழவந்தான் நகர் மின் நிலையத்தின் மூலம் வழங்கப்படுகிறது.




