Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ரேஷன் கடையில் அரிசி மூட்டை சரிந்து மூதாட்டி உயிரிழப்பு

திருமங்கலம், ஆக. 17: திருமங்கலம் அருகே சிந்துபட்டி அடுத்த அயன்மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் மணி மனைவி கருப்பாயி (65). இவர் அப்பகுதியில் உள்ள ரேஷன் கடையில் தினக்கூலியாக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆக.11ம் தேதி ரேஷன் கடையில் வேலை பார்த்து கொண்டிருந்த போது அடுக்கி வைத்திருந்த அரிசி மூட்டைகள் சரிந்து கருப்பாயி மீது விழுந்தன. இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கருப்பாயி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் சேதுராமன் அளித்த புகாரின் பேரில் சிந்துபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்