Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

இளம்பெண் மர்மச்சாவு

வாடிப்பட்டி, ஜூலை 17: வாடிப்பட்டி அருகே குலசேகரன் கோட்டை பெருமாள் கண்மாய் தெற்கு பகுதியில் திண்டுக்கல் - மதுரை நெடுஞ்சாலை அருகில் சுமார் 35 வயதுள்ள இளம்பெண் சடலம் நேற்று கிடந்தது. தகலறிந்த வாடிப்பட்டி இன்ஸ்பெக்டர் கோபி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். பெண்ணின் உடலில் காயங்கள் இல்லை என்பதுடன், யார் என்பதும் தெரியவில்லை.

உடலை கைப்பற்றி மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் அந்தப் பெண் யார், இது கொலையா அல்லது தற்கொலையா என்று வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே சமயநல்லூர் போலீஸ் டிஎஸ்பி ஆனந்தராஜ் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.