Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வாடிப்பட்டி ஆர்வி நகர் சாலையில் அடிக்கடி ஏற்படும் பள்ளங்கள்: பொதுமக்கள் பீதி

வாடிப்பட்டி, ஜூன் 15: வாடிப்பட்டி பேரூராட்சி 4வது வார்டுக்கு உட்பட்டது ஆர்வி நகர். இப்பகுதியில் சுமார் 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் ஆர்வி நகர் பகுதியிலிருந்து சென்று வருகின்றன. இந்நிலையில் திண்டுக்கல் மெயின் ரோட்டையும், ஆர்வி நகரையும் இணைக்கும் நுழைவு பகுதியில் அண்மையில் மழைநீர் வடிகால் தண்ணீர் கடத்துவதற்காக தெரு சாலையின் நடுவே குழாய்கள் அமைக்கப்பட்டன. இந்த குழாய்கள் அமைக்கப்பட்ட நிலையில் முறையாக பள்ளத்தை நிரப்பாமலும், இதுவரை மழைநீர் வடிகால் பணியை முடிக்காமல் சாலையும் போடாமல் உள்ளதால் அடிக்கடி ஆர்வி நகர் நுழைவாயில் பகுதியில் திடீர் பள்ளங்கள் ஏற்படுகின்றன.

சுமார் 5 அடி அளவிற்கு பள்ளங்கள் ஏற்படுவதால் வாகனங்கள் அதில் சிக்கி கொள்கின்றன. அதனை பேரூராட்சி நிர்வாகமும் முறையாக மூடாமல் மேலோட்டமாக மண்ணை கொட்டி மூடி செல்வதால் மீண்டும், மீண்டும் பள்ளங்கள் விழுந்து அதனால் விபத்துகள் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் மழை நேரங்களில் குண்டும், குழியுமாக உள்ள சாலையில் வாகன ஓட்டிகள் கீழே தவறி விழுந்து விபத்துகளிலும் சிக்கி வருகின்றனர். எனவே பேரூராட்சி நிர்வாகம் மழைநீர் வடிகால் பணிகளை முழுமையாக முடித்து ஆர்வி நகர் பகுதிக்கு தரமான சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்