Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அள்ள வராததால் அவலம்; அமைச்சர் தொகுதியிலுள்ள அம்மா உணவகத்தில் அடிப்படை வசதிகள் இல்லை: குன்றத்து மக்கள் குமுறல்

திருப்பரங்குன்றம், ஜூன் 15: திருப்பரங்குன்றம் பஸ் நிலையம் அருகே அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்திற்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் கூலித்தொழிலாளிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். இந்நிலையில் இந்த அம்மா உணவகத்தில் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை என இங்கு வருபவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

குறிப்பாக கை கழுவும் இடத்தில் உள்ள குழாய் வேலை செய்யாததால் வாசல் அருகே கை கழுவ வேண்டிய நிலை உள்ளதாகவும், உணவகத்தின் அருகே செல்லும் கால்வாயில் கழிவுநீர் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுவதுடன் கொசு உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர். அமைச்சர் தொகுதியில் உள்ள அம்மா உணவகத்திலேயே இந்த அவல நிலை உள்ளதாகவும், எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இங்கு அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.