Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை வீதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றம்

மதுரை, ஆக.14: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை வீதிகளில் மாநகராட்சி சார்பில் நேற்று ஆக்கிரமிப்புகளை அகற்றினர். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 17 வருடத்திற்கு பிறகு செப்.17ம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. இதற்காக கோயில் நிர்வாகம் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கோயிலை சுற்றியுள்ள சித்திரை வீதிகளில் 100க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இவற்றில் பல கடைகாரர்கள் பக்தர்களுக்கு இடையூறாக நடை பாதைகளில் பொருட்களை வைத்து விற்பனை செய்து வருவதாக மாநகராட்சிக்கு தொடர்ந்து புகார் வந்தன.

அதன்படி நகர் போலீசார் உதவியுடன் மாநகராட்சி ஊழியர்கள் அதிரடியாக சித்திரை வீதிகளில் ஆக்கிரமிப்பு செய்து நடை பாதையில் வைக்கப்பட்டு இருந்த பொருட்களை லாரிகளில் அள்ளிச் சென்றனர். தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்தால் அபராதம் மற்றும் சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர். பக்தர்கள் கூறுகையில், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்கள் நடக்க முடியாத நிலையில் பல இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது. மாநகராட்சி அதிகாரிகளின் இந்த அதிரடி நடவடிக்கை சித்திரை வீதிகள் முழுவதும் தூய்மையாக மாறியது. இது போன்று அதிகாரிகள் அவ்வப்போது அதிரடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.