Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

கார் பரிசு விழுந்ததாக கூறி ஆன்லைனில் ரூ3.30 லட்சம் மோசடி: சைபர் கிரைம் போலீசார் விசாரணை

மதுரை, ஆக.14: ஆன்லைனில் கார் பரிசு விழுந்ததாக கூறி பெண்ணிடம் ரூ.3லட்சத்து 30ஆயிரம் மோசடி நடந்தது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை அருகே ஏ.கொக்குளம் கண்ணனூரை சேர்ந்த அஜித்குமார் மனைவி உமா பார்வதி(26). ஆன்லைன் வர்த்தக வாடிக்கையாளராக இருந்து வருகிறார். இவருக்கு ஒரு நிறுவனத்தில் இருந்து குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில் அந்நிறுவனத்தின் எட்டாம் ஆண்டு விழாவை முன்னிட்டு உமா பார்வதிக்கு முதல் பரிசாக கார் பரிசு விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் மகிழ்ச்சி அடைந்த அவர், அந்த நம்பருக்கு தொடர்பு கொண்டார். அதில் பேசிய நபர் அவருக்கு கார் முதல் பரிசாக விழுந்து இருப்பதாகவும், அதைப் பெறுவதற்கு ஜிஎஸ்டி, வருமானவரி மற்றும் இதர தொகையாக ரூ.3 லட்சத்து 30 ஆயிரம் மட்டும் செலுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார். இதை நம்பி உமாபாரதி சில தவணைகளாக அந்த தொகையை செலுத்தியுள்ளார். பின்னர் அவருக்கு எந்தவித பதிலும் வரவில்லை. உமா பார்வதிக்கு தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. இது குறித்து அவர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிந்து, இந்த மோசடி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.