பேரையூர், ஆக.13: பேரையூர் தாலுகா, டி.கல்லுப்பட்டி அருகே நல்லமரத்தில் கேட்டவரம் தரும் வீரபக்த ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் நேற்று ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த பூஜையில் முன்னோர்கள் ஆசி பெற சிறப்பு பஜனை வழிபாடுகள் நடைபெற்றது. மேலும் ஆஞ்சநேயருக்கு வடை மாலை போட்டும் பக்தர்கள் வழிபட்டனர்.
+
Advertisement



