Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு உறுதி மொழி ஏற்பு

மதுரை, ஆக.12: போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு உறுதி மொழி எடுக்கப்பட்டது. போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு’ உருவாக்கும் வகையில் சென்னையில் முதலமைச்சர் தலைமையில் கல்லூரி மாணவர்களிடம் பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா, போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், எஸ்பி தேவநாதன், மாநகராட்சி துணை மேயர் நாகராஜன், மாநகராட்சி ஆணையாளர் கவ்ரவ்குமார், டிஆர்ஓ அன்பழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், தன்னார்வலர்கள், சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். போதைப்பொருள் எதிர்ப்பு குழுக்கள் சிறப்பாக செயல்பட்டதற்காக மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற வண்டியூர் அரசு உயர்நிலைப் பள்ளிக்கும், இரண்டாம் இடம் பெற்ற பாரபத்தி அரசு மேல்நிலை ப்பள்ளிக்கும், மூன்றாம் இடம் பெற்ற திருநகர் முத்துத்தேவர் முக்குலத்தோர் மேல்நிலைப் பள்ளிக்கும், முதலிடம் பெற்ற மதுரை பாத்திமா கல்லூரிக்கும், இரண்டாம் இடம் பெற்ற மதுரை, மூலக்கரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரிக்கும், மூன்றாம் இடம் பெற்ற மதுரை மீனாட்சி அரசினர் மகளிர் கலைக்கல்லூரிக்கும் கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கினார்.

இதேபோல், தன்னார்வ குழுக்கள் சிறப்பாக செயல்பட்டதற்காக முதலிடம் பெற்ற நாகமலை புதுக்கோட்டை சிறுமலர் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கும், திருமங்கலம் பி.கே.என்.பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கும், மூன்றாம் இடம் பெற்ற கேப்ரன்ஹால் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கும் பாராட்டுச் சான்றிதழும் கேடயங்களும் வழங்கப்பட்டது. மதுரை தெப்பக்குளம் தியாகராசர் நன்முறை மேனிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் போதைப் பொருள் விழிப்புணர்வு உறுதி மொழியேற்பு நிகழ்ச்சி போதைப் பொருள் ஒழிப்பு மன்றத்தின் சார்பாக நடந்தது. தலைமையாசிரியர் (பொ) அறிவழகன் தலைமை வகித்தார்.

கே.புதூர் அல்அமீன் மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியர் ஷேக் நபி தலைமை வகித்தார். கோ.புதூர் எஸ்ஐ முருகானந்தன், போக்குவரத்து எஸ்ஐ விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.