அலங்காநல்லூர், ஆக.12: மதுரை மாவட்டம் வாயக்குளம் ஊராட்சி மீனாட்சி நகர் பகுதியை சேர்ந்தவர் லெனின் ராஜா (35). இவரது மனைவி பிரித்தி. 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப சண்டை காரணமாக மனைவி, கோபித்துக் கொண்டு, தாய் வீடான மதுரை வைத்தியநாதபுரத்திற்கு சென்று விட்டார்.
மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்த வந்த நிலையில், நேற்று வீட்டில் உள்ள பெட்ரூமில் மதுபானத்தில் விஷம் கலந்து குடித்து லெனின் ராஜா இறந்து கிடந்துள்ளார். தகவலின் பெயரில் வந்த அலங்காநல்லூர் போலீசார், உடலை கைப்பற்றி மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.




