மேலூர் அருகே வீரகாளியம்மன் கோயிலில் பூத்தட்டு திருவிழா கோலாகலம்
Advertisement
மேலூர், டிச. 10: மேலூர் அருகே சருகுவலையபட்டி கிராமத்தில் உள்ள வீரகாளியம்மன் கோயிலில் பூத்தட்டு திருவிழா நேற்று நடைபெற்றது. முன்னதாக காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் நேற்று முன் தினம் பால் குடம் எடுத்து ஊர்வலாக வந்து வீரகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அன்று மாலை வீரகாளியம்மன் கோயிலில் இருந்து சாமி ஊர்வலம் நடைபெற்றது.
தொடர்ந்து நேற்று மாலை சருகுவலையபட்டி, மணப்பட்டி, ஒத்தபட்டி, மெய்யப்பன்பட்டி, அண்ணா நகர், அரியூர்பட்டி, சுப்பிரமணியபுரம், மேற்குவளவு, ஒத்தவளவு, லெட்சுமிபுரம் ஆகிய பகுதியில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மந்தை கோயிலில் இருந்து பூத்தட்டு எடுத்து புறப்பட்டு வீரகாளியம்மன் கோயில் சென்று சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
Advertisement