பேரையூர், டிச. 10: பேரையூர் பகுதியில் ஏஎஸ்பி அஸ்வினி தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பெருங்காமநல்லூர் அரசுப் பள்ளி அருகே திருமங்கலம் தாலுகா அம்மாபட்டியைச் சேர்ந்த தனுஷ் (23), இதே ஊரைச் சேர்ந்த அபிஷேக் (21), கம்மாளபட்டியைச் சேர்ந்த குணால் (22), ஆகியோர் 100க்கும் மேற்பட்ட மதுப்பாட்டில்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, சேடபட்டி போலீசார் அவர்களிடமிருந்த மதுப்பாட்டில்களைப் பறிமுதல் செய்து 3 பேரையும் கைது செய்தனர்.
+
Advertisement


