மதுரை, ஆக. 10: மதுரை மாட்டுத்தாவணி அருகே அமைந்துள்ள ஒருங்கிணைந்த காய்கறி மார்க்கெட்டிற்கு கடையநல்லூர் அருகே உள்ள புளியங்குடி, எழுமலை, சிறுமலை, பட்டுக்கோட்டை மற்றும் மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து தினந்தோறும் விற்பனைக்காக எலுமிச்சை விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில் கடந்த மாதம் வரை கிலோ ரூ.70 முதல் ரூ.90 வரை விற்பனை ஆன எலுமிச்சை, தற்போது விலை உயர்ந்து கிலோ ரூ.100 முதல் ரூ.120க்கு வரை விற்பனை ஆகிறது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது: கடந்த மாதம் வரையில் எலுமிச்சை கிலோ ரூ.70க்கு விற்றதால் கவலை அடைந்தனர். தற்போது ஆடி மாதம் என்பதால் ஆடி பவுர்ணமி மற்றும் தொடர்ந்து ஆடி அமாவாசை வருவதால் மதுரையின் பல்வேறு பகுதிகளில் கோயில் திருவிழாக்கள் உள்ளிட்டவை நடைபெறுவதால் எலுமிச்சை பழங்களின் தேவை அதிகரித்துள்ளதால் விலை சற்று உயரந்துள்ளது. தற்போது பட்டுக்கோட்டை பகுதியில் இருந்து தான் நல்ல ரக எலுமிச்சை பழங்கள் விற்பனைக்கு வருகிறது. பழங்கள் வரத்து குறைந்து காணப்படும் என்பதால் ஆந்திரா பகுதிகளில் இருந்து பழங்கள் அதிகளவில் விற்பனைக்கு வரும், மேலும் பழங்கள் அதிகளவில் வரும் பட்சத்தில் மேலும் விலை குறைய வாய்ப்புள்ளது. இவ்வாறு கூறினர்.



