மேலூர், ஆக. 10: கொட்டாம்பட்டி போலீசாருக்கு பள்ளபட்டி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து எஸ்ஐ சல்மான் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். பள்ளபட்டியில் உள்ள டீக்கடையில் சோதனை செய்த போது 4 கிலோ புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் இருப்பது தெரியவரவே அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விற்பனையில் ஈடுபட்ட அலெக்ஸ் பாண்டியன் (26), மணிகண்டன் (30) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
+
Advertisement



