Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சாக்லெட் தயாரிப்பு பயிற்சி

உலக சாக்லெட் தினத்தை முன்னிட்டு, மதுரை மீனாட்சி அரசு மகளிர் கலைக்கல்லூரியில், இரண்டாம் ஆண்டு மாணவியருக்கு சாக்லெட் தயாரிப்பு பயிற்சி முகாம் நடந்தது. கல்லூரி முதல்வர்(பொ) யாழ் சந்திரா தொடங்கி வைத்தார். பயிற்சியாளர் ஜமில் ராணி, வீட்டிலேயே தரமான சாக்லெட்டுகளை தயாரிக்கும் முறைகள் குறித்து செய்முறை விளக்கத்துடன் பயிற்சி அளித்தார். இந்தப் பயிற்சியில் 30க்கும் மேற்பட்ட மாணவியர் கலந்து கொண்டு சாக்லெட் தயாரிப்பின் நுணுக்கங்கள் மற்றும் சிறு தொழில் வாய்ப்புகள் குறித்து பயனுள்ள தகவல்களை அறிந்து பயன் பெற்றனர்.