Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உதவித்தொகையை உயர்த்தக் கோரி மாற்றுத்திறனாளிகள் முற்றுகை போராட்டம்

மதுரை, செப்.8: மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் ரூ.ஆயிரம் மற்றும் ரூ.2 ஆயிரம் உதவித் தொகையை ரூ.6 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாநில உதவித் தலைவர் தவமணி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். மாவட்டத் தலைவர் மதி பாரதி, மாவட்டச் செயலாளர் பாலமுருகன், மாவட்டப் பொருளாளர் மணிகண்டன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

அதில், மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் சம உரிமையும், சம வாய்ப்பும் வழங்க வேண்டும். உதவித்தொகைக்காக விண்ணப்பித்து காத்திருக்கும் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் உடனடியாக உதவித்தொகை வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை அண்டை மாநிலங்களில் வழங்கப்படுவது போன்று உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. போராட்டத்தில் சிபிஎம் மாநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் லெனின், புறநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜீவானந்தம் ஆகியோர் பேசினர்.