Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ஆடி கிருத்திகையை முன்னிட்டு சோலைமலை முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு: திரளான பக்தர்கள் தரிசனம்

மதுரை, ஆக.8: மதுரை அழகர்கோவில் மலைமேல் அமைந்துள்ள முருகனின் ஆறாம் படை வீடான சோலைமலை முருகன் கோவிலில் ஆடி கிருத்திகையையொட்டி நேற்று சிறப்பு அபிஷேகம் மற்றும் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. சஷ்டி மண்டபத்தில் உற்சவர் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு பால், பழம், பன்னீர், விபூதி, சந்தனம், தேன் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் மயில் வாகனத்தில் சமேதராக முருகப்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இதை தொடர்ந்து ஆலய உட்பிரகாரத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் நெய் விளக்கேற்றி வழிபாடு செய்தனர். முன்னதாக ஆடி மாத நான்காவது வார வெள்ளிக் கிழமையையொட்டி மலைமேல் அமைந்துள்ள ராக்காயி அம்மன் கோயில் சன்னதி அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு பால், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் எலுமிச்சம்பழம் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் ராக்காயி அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.