Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

லாரி மீது கார் மோதி விபத்து குழந்தைகள் உட்பட 7 பேர் படுகாயம்

மேலூர், ஆக.8: மேலூர் அருகே சிவகங்கை சாலையில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 2 குழந்தைகள், 3 பெண்கள் உட்பட 7 பேர் படுகாயமடைந்தனர். தேனியை சேர்ந்தவர் அம்சராஜன்(32). இவர் தனது மனைவி மணிமாலாதேவி(28), தாய் பார்வதி(46), குழந்தை யாஜித்(6), தங்கை மோகனபிரியா(22), அவரது கணவர் யோகேஸ்வரன் (31), இரண்டரை வயது குழந்தை ரித்திஷா ஆகியோருடன் காரில் நேற்று ராமநாதபுரம் புறப்பட்டனர்.

மேலூர் சிவகங்கை சாலையில் மலம்பட்டி அருகே கார் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த லாரி மீது மோதியது. இதில் காரில் பயணம் செய்த அனைவரும் படுகாயமடைந்தனர். அவர்கள் மேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அம்சராஜன் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். விபத்து குறித்து மேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.