Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

மது போதையில் சாக போகிறேன் என அடிக்கடி மனைவியை மிரட்டிய கணவர் தற்கொலை

மதுரை, ஜூன் 8: மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்தவர் முருகேசன் (57). இவருக்கு மதுஅருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. அடிக்கடி குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவி லட்சுமியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். ஒவ்வொரு முறை தகராறின் போதும், ‘நான் சாக போகிறேன்’ என மனைவியை மிரட்டி வந்துள்ளார். முதலில் பயந்து போன மனைவி, நாளடைவில் கணவனின் மிரட்டலை கண்டுகொள்ளவே இல்லை. கணவர் வீட்டிற்கு வந்து மதுபோதையில் மிரட்டியபோதும், வழக்கமான ஒன்று தான் என அதனை அவர் பெரிதாகவும் எடுத்து கொள்ளவில்லை. இந்நிலையில் சம்பவத்தன்று மதுபோதையில் வீட்டிற்கு வந்த முருகேசன் தனது அறைக்கு சென்று அங்கு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரில் ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.